சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் முத்து மலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன் சிலை உள்ளது. இக்கோவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்து சாமி, சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், ஈரோடு மாவட்ட இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சாமி தரினம் செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி திண்டல் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் ராஜகோபுரம் , படிக்கட்டுகள் உள்ளிட்டவை அமைய உள்ளது இதற்காகதிட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது இதற்காக ஸ்தபதி திருவாரூர் தியாகராஜன் மூலம் முத்துமலை முருகன் கோவிலில் அமைந்துள்ள கட்டுமான பணிகள் குறித்தும் பொதுமக்கள் வந்து செல்ல பாதுகாப்பு குறித்தும் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பதை நேரில் பார்வையிட வந்தோம் என தெரிவித்தார். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது ஒட்டி இந்துக்கள் வாக்கு பெறுவதற்காக கோவில் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுகிறதா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு திமுகவிற்கு இந்துக்கள் ஓட்டு பெறுவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. கோவிலில் அரசியல் சார்ந்த கேள்விகள் வேண்டாம். என கேட்டுக்கொண்டார்.