சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய வீட்டு வசதி நகர் பகுதியில் அமைந்துள்ள மகாசக்தி மாரியம்மன் கோவில், விநாயகர் திருக்கோவில் 12 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு மஹாகும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று காலை கோ பூஜை, இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்ற பின்னர் தீபாரதனை வேதாச்சறியர்கள் வேத மந்திரம் முழங்க ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் புனித நீரை தலையில் சுமந்தவாறு மேளதாள முழங்க கோவிலை சுற்றி வந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. பின்னர் மகா மாரியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் மூலவர் சிலைக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்று முடிந்த பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.