சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் அமைந்துள்ள உக்கிர கதலி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 30 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் மார்கழி 1ஆம் தேதி உக்கிர கதலி லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் கரும்புகள் எடுத்து வந்து மார்கழி பஜனை, திருப்பாவை பாடி கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.
இந்த கோவிலில் திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என ஐதீகமாக ஆண்டுதோறும் செய்து வருகின்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உக்கிர கதலி லட்சுமி நரசிம்ம பெருமாளை தரிசனம் செய்தனர்.