சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடக்கு காடு பகுதியில் அய்யனார் கோவில் ஏரி அமைந்துள்ளது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அய்யனார் கோயில் நிரம்பி உள்ளது. இந்நிலையில் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி மகன் திருச்சிற்றம்பலம் சிவா (18) இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். தனது பள்ளி கால நண்பர்கள் சபரீஷ்வரன் என்பவருக்கு இன்று பிறந்தநாள் என்பதற்காக ஹோட்டலுக்கு சென்று சாப்பாடு சாப்பிட்டு விட்டு மற்றொரு நண்பர் மனோஜ் ஆகியோருடன் திருச்சிற்றம்பலம் சிவா ஏரி பகுதிக்கு சென்றுள்ளார். தொடர் விடுமுறை தினத்தில் ஏரி பகுதிக்குச் சென்றபோது நீர் பகுதியில் திருச்சிற்றம்பலம் சிவா இறங்கி புகைப்படம் எடுக்க நண்பர்களிடம் சொல்லி உள்ளார். அப்போது அதிக அளவில் ஆழம் இருந்ததால் திடீரென சிவா நீருக்குள் மூழ்கினார். நண்பர்கள் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் கல்லூரி மாணவரின் உடல் சடலமாக மீட்டனர். உடலை கைப்பற்றிய ஆத்தூர் நகர போலீசார் உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.