வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது வீட்டில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இதில் தங்க நகைகள், பணம், வீட்டு உபயோக பொருட்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தீக்கிரையானது. இதனால் இவரது குடும்பத்தினர் கதறியது காண்போரை கலங்க வைத்தது.