இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 16ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இது பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதுடன், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும்.ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6263 ஆகும். ஒருவர் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம்.