கராச்சி: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய (பிப்.,21) 3ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச உள்ளது. நேற்று (பிப்.,20) வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.