ரஷ்யா - பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

59பார்த்தது
ரஷ்யா - பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து
ரஷ்யாவின் வடமேற்கு கோமி பகுதியில் பயணிகள் ரயில், திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வோர்குடாவிலிருந்து நோவோரோசிஸ்க் கருங்கடல் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டதால், 70 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி