ஆரஞ்சு நிற தொப்பியை தட்டி தூக்கிய ருதுராஜ்!

3711பார்த்தது
ஆரஞ்சு நிற தொப்பியை தட்டி தூக்கிய ருதுராஜ்!
சி.எஸ்.கே அணிவீரர் ருதுராஜ் இத்தொடரில் 627 ரன்கள் எடுத்த நிலையில் ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார்

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தொடக்க ஆட்டகாரர்களான ருதுராஜ் மற்றும் டு ப்ளஸி களமிறங்கினர். 5 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது.

அதேபோல தற்போது கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 24 ரன்களை சேர்த்து கடந்த நிலையில் அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை லோகேஷ் ராகுலிடம் (626 ரன்) இருந்து தட்டிப்பறித்தார்.

தொடர்புடைய செய்தி