BSNL-க்கு ரூ.89,000 கோடி மதிப்பிலான மறுமலர்ச்சி திட்டம்!

1408பார்த்தது
BSNL-க்கு ரூ.89,000 கோடி மதிப்பிலான மறுமலர்ச்சி திட்டம்!
நெருக்கடியை சந்தித்து வரும் பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ நவீனமயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.89,000 கோடி மறுமலர்ச்சி தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2.10 லட்சமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. BSNL-க்கு 4G/5G ஸ்பெக்ட்ரம் ஒதுக்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களின் கீழ், பிஎஸ்என்எல் கிராமப்புற மற்றும் அணுகப்படாத பகுதிகளில் 4G கவரேஜ், அதிவேக இணைய இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி