ரூ.25,000 சம்பளம்: அதிர வைத்த விளம்பரம்

66பார்த்தது
ரூ.25,000 சம்பளம்: அதிர வைத்த விளம்பரம்
மோமோஸ் கடையில் உதவியாளராக சேர்வதற்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்கிற விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘X’ தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வரும் இந்த விளம்பர போஸ்டரில் “மோமோஸ் கடை உதவியாளர் பணிக்கு ரூ.25,000 சம்பளம் என்று ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது. இது எந்த ஊரில் உள்ள கடையில் எழுதப்பட்டிருந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த புகைப்படத்தைப் பகிர்ந்த பலரும் இந்தக் கடை எங்கே இருக்கிறது? என கூறுங்கள் நான் வேலைக்கு சேர்கிறேன் என காமெடியாக பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி