தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இடையே பொதுப் பாதை பிரச்சனை இருந்துள்ளது. பல நாட்களாக இருந்து வந்த இந்த பிரச்சனை காரணமாக நேற்று (ஜன.4) அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், அரிவாளை எடுத்துவந்து கண்ணனை ஓட ஓட விரட்டி வெட்ட முயன்றுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.