அரசு பள்ளியை தத்தெடுத்த ரிஷப் ஷெட்டி

574பார்த்தது
அரசு பள்ளியை தத்தெடுத்த ரிஷப் ஷெட்டி
காந்தார படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து காந்தார படத்தின் பாகம் 1 உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இதன் பூஜை, உடுப்பி மாவட்டம் கும்பாசியில் உள்ள ஆனேகுட்டே விநாயகரர் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் ரிஷப் ஷெட்டி, கர்நாடக மாநிலம் உடுப்பி அருகிலுள்ள தனது சொந்த கிராமமான கீரடியில் உள்ள அரசு பள்ளியைத் தத்தெடுத்துள்ளார். அந்த பள்ளிக்கு எல்லா உதவிகளையும் செய்து குடுக்க முன்வந்துள்ளார்.