இன்று மாலை புயலாக வலுப்பெறுகிறது 'ரிமல்'

579பார்த்தது
இன்று மாலை புயலாக வலுப்பெறுகிறது 'ரிமல்'
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (மே 24) நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (மே 25) காலை வலுப்பெற்று, வங்கதேச கேப்புப்பாரா-விலிருந்து சுமார் 440 கி.மீ தெற்கு-தென்மேற்கேயும், மேற்குவங்காளம் சாகர் ஐலன்ட்டிலிருந்து 440 கி.மீ தெற்கு- தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

இது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை தீவிர புயலாக வலுப் பெற்று நாளை நள்ளிரவு வங்கதேச-கேப்புப்பாராவிற்கும் மேற்குவங்காளம் சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும் நேரம் தரைக்காற்று மணிக்கு 110-120 கி.மீ வேகத்திலும் இடை இடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி