1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவு

82பார்த்தது
1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவு
மக்களவைத் தேர்தலின் ஒரு பகுதியாக 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று (மே 25) ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்து ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி