பழிக்குப்பழி.. ரவுடி தலை துண்டித்து கொலை

126386பார்த்தது
பழிக்குப்பழி.. ரவுடி தலை துண்டித்து கொலை
மதுரையில் கடந்த 2012ஆம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்று விட்டு வந்தவர்களை சிந்தாமணி அருகே ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தடுத்து நிறுத்தி, அரிவாளால் வெட்டி 7 பேரை கொலை செய்தது. இது தொடர்பாக 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் முதன்மை குற்றவாளியான ரவுடி ராமர் பாண்டியன் மற்றும் கார்த்திக் இருவரும் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தனர். இந்நிலையில் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு மதுரை அரவக்குறிச்சி அருகே தடையாய் வீலரில் வந்துகொண்டிருந்த போது காரில் வந்த மர்மக்கும்பல் டூவீலரை வழிமறித்து அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில் ரவுடி ராமர் பாண்டியன் தலை துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி