வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த வீரர்களுக்கு ஃபுட் பாய்சன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கிய உணவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஃபுட் பாய்சன் ஆனதால், தன்னார்வலர்கள் வழங்கும் உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், மீட்பு படை வீரர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.