தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சைகளுக்கு பதிலாக மாற்று பயிருக்கு மாறி வரும் நேரத்தில், லாபம் தரும் ‘பேஷன் ஃபுரூட்’-டை பயிரிடுவதில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே பேஷன் ஃபுரூட் பழம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு தோட்டகலைத்துறையினர் ஆலோசனை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சிகள் வழங்கினால் பேசன் புரூட் பழம் சாகுபடி அதிகரிக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.