யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. வேறு வழக்குகளில் ஜாமீன் பெற தேவையில்லையென்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.