வீடு கட்ட வேண்டும் என்றால் செவ்வாய் மற்றும் சந்திர பகவானின் ஆசிர்வாதம் நமக்கு தேவை. அதற்கு செவ்வாய் பகவானுக்கு உரிய இனிப்பு பொருளான கற்கண்டு மற்றும் சந்திர பகவானுக்கு உரிய தானியமான பச்சரிசியை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு கோவிலில் இருக்கும் மரத்தடியில் கற்கண்டு அரிசி சேர்த்து அரைத்த பொருட்களை எறும்புகளுக்கு அன்னதானமாக போட வேண்டும்.