தென் மாவட்டங்களுக்கு நிவாரண தொகை - அமைச்சர்

77498பார்த்தது
தென் மாவட்டங்களுக்கு நிவாரண தொகை - அமைச்சர்
தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தென் மாவட்டங்களுக்கு நிவாரண தொகை குறித்து இன்னும் 3 நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் இதுவரை 3 பேர் இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர்.