மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

63பார்த்தது
காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூலை 28) தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, அமைச்சர் கே.என்.நேரு தண்ணீரை மலர் தூவி வரவேற்றார். முதற்கட்டமாக 12ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றங்கரை ஓரத்தில் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி