அலங்கார ஊர்தி நிராகரிப்பு.. இபிஎஸ்-க்கு தமிழக அரசு விளக்கம்

69பார்த்தது
அலங்கார ஊர்தி நிராகரிப்பு.. இபிஎஸ்-க்கு தமிழக அரசு விளக்கம்
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், அவருக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. “2025ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன. சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி