கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் இன்று (ஜூலை 30) அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.