கனமழையை எதிர்கொள்ள தயார் - மா.சு

76212பார்த்தது
கனமழையை எதிர்கொள்ள தயார் - மா.சு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், டிச.1-4ம் தேதி வரை பெய்யவுள்ள கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பல பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் தான் மழைநீர் வேகமாக வடிந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், மழைநீர் வடிகால் பணிகள் நல்ல பலனை அளித்துள்ளது என்றார். மேலும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பாதாளச் சாக்கடை அடைப்புகளைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.