சம்பவம் செய்த ஆர்சிபி.. சோகத்துடன் வெளியேறியது பஞ்சாப்

80பார்த்தது
சம்பவம் செய்த ஆர்சிபி.. சோகத்துடன் வெளியேறியது பஞ்சாப்
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய(மே 9) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஐபிஎல் தொடரை விட்டு பஞ்சாப் அணி வெளியேறியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

அடுத்தடுத்த விக்கெட்டுகளால் திணறிய பஞ்சாப் அணி, 17 ஓவர் முடிவில் 181 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளும் இழந்து தோல்வியடைந்தது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் பஞ்சாப் இழந்தது.

தொடர்புடைய செய்தி