குடிநீர்வினியோகம் நிறுத்தப்பட்டு சரி செய்யும் பணி தீவிரம்

61பார்த்தது
ஆர்எஸ் மங்கலம் பகுதிகளுக்கு காவேரி கூட்டு குடிநீர் திட்டகுடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது



ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்  மேல்பனையூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள
கண்மாய் பகுதியில்  காவிரி கூட்டு குடிநீர் பெரிய குழாயில் ஆங்காங்கே கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணானது. இதற்காக  அதை சரி செய்யும் விதமாக சுமார் 100 அடி தூரம் புதிய குழாய் அமைத்து கசிவு ஏற்பட்ட பகுதிகளை நீக்கி புதிய குழாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறும்பொழுது இன்று இரவுக்குள் சரி செய்யப்பட்டு நாளை தண்ணீர் வினியோகம் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி