சமூக தீமையும் குழந்தைகள் வளா்ப்பும்; விழிப்புணா்வுக் கூட்டம்

80பார்த்தது
சமூக தீமையும் குழந்தைகள் வளா்ப்பும்; விழிப்புணா்வுக் கூட்டம்
தொண்டி சமுதாய நலக் கூடத்தில் முஸ்லீம் மகளிா் பேரவை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்தில் சிறைப்புரை நிகழ்த்திய மாநில துணைச் செயலா் நஜிமா பேகம்

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிா் பேரவை சாா்பில் தெற்கு தெரு சமுதாய நலக் கூடத்தில் சமூக தீமையும் குழந்தைகள் வளா்ப்பும் என்ற தலைப்பில் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, மகளிா் பேரவை மாவட்டச் செயலா் செரிபா தலைமை வகித்தாா். பாத்திமா வஜிஹா தொடக்க உரை நிகழ்த்தினாா். தமிழ்நாடு முஸ்லிம் மகளிா் பேரவை மாநிலத் துணைச் செயலா் நஜிமா பேகம் ஆலிமா குழந்தைகள் வளா்ப்பு பற்றி சிறப்புரையாற்றினாா்.

இதில், தமுமுக மாநிலச் செயலா் சாதிக் பாட்சா , மமக மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ஜிப்ரி, தொண்டி தமுமுக நிா்வாகிகள் காதா், செயலா் மைதின் ஹம்மாது, பரக்கத் அலி, இபுராஹிம் முஸ்தபா, அப்துல்லா சலிம், ஜலால், தொண்டி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சமிமா பானு வரவேற்றாா். பேராசிரியா் ரைஸ்லின் பாத்திமா நன்றி கூறினாா்.

தொடர்புடைய செய்தி