ஆம்புலன்சிஸில் குழந்தை பெற்ற நிறைமாத கர்ப்பிணி.!

538பார்த்தது
ஆம்புலன்சிஸில் குழந்தை பெற்ற நிறைமாத கர்ப்பிணி.!
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவரது மனைவி அனுசியா. 23,. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்கு தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

இன்று காலை இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம்  ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் வரும் வழியில் மரப்பாலம் அருகே பிரசவ வலி அதிகரிப்பால் ஆம்புலன்சிலேயே பெண் குழந்தை  பிறந்தது. அவசர கால மருத்துவ பணியாளர் பிரியா, ஓட்டுநர் கார்த்திக் உதவியுடன் பிரசவ பராமரிப்பு உதவி அளித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுசியாவையும், அவரது பெண் குழந்தையையும்  பாதுகாப்பாக கொண்டு வந்துனர்.    ஆம்புலன்ஸ்  ஊழியர்களை அனுசியா குடும்பத்தை  பாராட்டினார் என 108 ஆம்புலன்ஸ்  மாவட்ட ஒருங்கினைப்பாளர் தமிழ் செல்வன்  தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி