Sep 16, 2024, 05:09 IST/இராமநாதபுரம்
இராமநாதபுரம்
பாம்பன் புதிய ரயில் பாலம் மின் ஒளிவிளக்கால் ஜொலிக்கும் அழகு!
Sep 16, 2024, 05:09 IST
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடல் பகுதியை இணைக்கக்கூடிய பழைய ரயில்வே தூக்கு பாலம் கடந்த 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு நூற்றாண்டுக்கு மேல் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு தொழில்நுட்பக் கோளாறால் மண்டபம் ராமேஸ்வரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டு புதிய ரயில்வே தானியங்கி பாலம் பணிகள் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது முழுமையாக முடிந்து வந்த நிலையில் ரயில் சோதனைகள் நடத்தப்பட்டு ஆய்வு பணிகள் நிறைவடைந்தன இந்நிலையில் அக்டோபர் மாதம் 2ம் தேதி திறக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திறப்பு விழா காத்திருக்கும் ரயில்வே புதிய தானியங்கி தூக்குப்பாலம் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரும் தானியங்கி தூக்கு பாலத்தை அவ்வழியாக ரோடு பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.