மத்திய அரசு திட்டத்தை வீடு வீடாக சென்று விளக்கிய பாஜகவினர்.!

567பார்த்தது
"கிராமம் செல்வோம்" மக்களுக்கு மத்திய அரசு திட்டங்களை எடுத்துரைப்போம் என்று பாஜக நிர்வாகிகள் நாடு முழுவதிலும் மக்களுக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும் ஒன்பது ஆண்டு கால சாதனைகளையும் எடுத்துரைத்து வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கருத்தனேந்தல் கிராமத்தில் போகலூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துவேல் பாண்டியன் வீடு வீடாக சென்று மத்திய அரசு திட்டங்களை எடுத்துரைத்தார் குறிப்பாக விவசாயிகளுக்கு பி எம் கிஷான், குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களையும் ஒன்பதாண்டு கால சாதனைகளையும் விவசாயப் பொதுமக்களிடம் தெரிவித்தார் இதில் பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி