தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் சார்பாக வஃபு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து
மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்: ராமநாதபுரம் அரசு பணிமனை அருகில் இன்று மாவட்டத்தலைவர் இப்ராஹீம் சாபிர் தலைமையில்
நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலபொதுச் செயலாளர் முஜிபுர்ரஹ்மான் கண்டன
உரையாற்றினார். இந்த
கண்டன உரையில் வஃபு வாரிய திருத்தச்சட்டம் எனும் பெயரில் இஸ்லாமியர்களுக்கு தர்மமாக வழங்கப்பட்ட நிலங்களை
அபகரிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றும், வஃபு வாரியத்திற்கான அதிகாரங்களை முற்றிலும்
அபகரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்குவதென்பது செயல்திட்டங்களை
நடைமுறைப்படுத்து வதற்கான ஒரு வழிமுறையாகும் எனவும் தெரிவித்தார்.
இச்சட்டத்தை ஒன்றிய அரசு கட்டாயம் திரும்பப் பெற்றே
ஆக வேண்டும் என ஏராளமானோர்
இப்போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் முடிவில் மாவட்ட செயலாளர் தினாஜ்கான் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்