பார்த்திபநூரில் குண்டும் குழியுமான சாலை - சீரமைக்க கோரிக்கை

63பார்த்தது
பார்த்திபநூரில் குண்டும் குழியுமான சாலை - சீரமைக்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் சேதமடைந்து குண்டும் குழியுமாக  மாறிய சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பார்த்திபனூர் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிவாசல் வழியாக கமுதி, அருப்புக்கோட்டை  செல்லும் சாலைகள் மற்றும் காய்கறி கடைகள் மற்றும் பூக்கடை அமைந்துள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.  
இதனால் அச்சாலையில் செல்லும் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  
இரவு நேரங்களில் அச்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பரமக்குடி வட்டத்தில் அதிக அளவில் சுற்றுப்புற கிராம மக்கள் வந்துசெல்லும் ஊராக பார்த்திபனூர் பேரூராட்சி உள்ளது. எனவே பார்த்திபனூர் பகுதி மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி