குடும்பத் தகராறு: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.!

55பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்திரக்குடி அருகே உள்ள சின்ன நாகாட்சி கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் முனியசாமி.

இவருக்கு பாரதி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். முனியசாமி கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முனியசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சம்பவம் குறித்து அறிந்த சத்திரக்குடி காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி