கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து எமனேஸ்வரம் போலீசார் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொதுவக்குடியை சேர்ந்தவர் அமுதா இவரது மகன் 20 வயதுடைய கேசவன் இவர் பரமக்குடி அழகப்பா கலைக் கல்லூரியில் B-A மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாகவும் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார் இந்த நிலையில் அமுதாவுக்கு தெரியாமல் கேசவன் ஊர் சுற்றி திரிந்ததாகவும் அதை கண்டித்ததாகவும் சொல்லப்படுகிறது இதனை அடுத்து சம்பவ நாளன்று அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவரது வயலில் உள்ள வேப்ப மரத்தில் கேசவன் தனக்கு தானே தூக்கு மாட்டிக் கொண்டு கிடந்தவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அப்போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கேசவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து அமுதா எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தேக மரணம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.