பரமக்குடி யோகதா சத்சங்க தியான மையத்தின் சார்பில் AP ஷா மஹாலில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் எழுதப்பட்ட "விஞ்ஞானரீதியான குணப்படுத்தும் சங்கல்பங்கள்", மற்றும், "பயமின்றி வாழ்தல்". என்ற இரு நூல்கள் வெளியிடப்பட்டது.
இந்த நூல்களை சுவாமி சுத்தானந்தகிரி, பிரம்மச்சாரி நிரஞ்ஜனானந்தா மற்றும் விரஜானந்தா வெளியிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிரியா யோக தியானம், வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்ற ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.
யோகதா சத்சங்க சொஸைடி ஆப்
இந்தியா மூத்த சன்னியாசி சுவாமி சுத்தானந்தகிரி கூறுகையில்
அனைவரிடத்திலும் ஒரே இறைவன் தான் உள்ளார், உயர்ந்த நிலையை அடையும் போது மத பேதங்கள் இருக்காது, அகம் புறம் இரண்டிலும் நாம் யார் என்பதை உணர்ந்தால் உண்மையான வெற்றி கிடைக்கும். வாழ்க்கையின் குறிக்கோள் இறைவன் மற்றும் அவனது அன்பை அடைவதாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கஷ்டம் வருவது நல்லதே அப்போதுதான் எளிதாக இறைவனை அடைய முடியும் மேலும் இந்த சிறந்த வழியை பின்பற்றி வாழ்க்கையில் சரி சமநிலையான வாழ்க்கை வாழ கிரியா யோக தியானத்தை தினசரி நாம் வீட்டிலிருந்து கற்றுப் பயன் பெறலாம் என்று ஸ்வாமிஜி அவர்கள் உரையாற்றினார்.