அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து.

73பார்த்தது
அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து.
மதுரைக்கு அவசர சிகிச்சைக்காக சென்ற ஆம்புலன்ஸ் சத்திரக்குடி அருகே அடுத்தடுத்த வாகனத்தில் மோதி விபத்து


ராமநாதபுரம் மாவட்டம் கொத்தங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா இவர் சம்பவ நாளன்று ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து உஸ்மான் அலி என்ற நோயாளியை மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக சத்திரக்குடி அருகே வந்து கொண்டிருந்தபோது தென்னவனூரைச் சேர்ந்த 35 வயதுடைய சரவணகுமார் சேமனூர் சாலையில் இருந்து இருசக்கர வாகனத்தில் திடீரென தேசிய நெடுஞ்சாலைக்கு குறுக்கே வந்ததாகவும் அப்போது ஆம்புலன்ஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது மட்டுமின்றி எதிரே வந்த சரக்கு வாகனத்திலும் மோதி விபத்துக்குள்ளானது இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சரவணகுமாருக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது இதுகுறித்து முகமது அப்துல்லா சத்திரக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி