காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.!

58பார்த்தது
காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா பூப்பாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வந்ததை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டதுடன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வந்த உணவை சாப்பிட்டு பார்த்து ஒவ்வொரு நாளும் நன்றாக உணவு வழங்கிட வேண்டுமென பணியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, வட்டாட்சியர் முருகேசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் அழகர்வேல் பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி