சையது ஹமீது கல்லூரி 24 ஆம் ஆண்டு விழா.!

61பார்த்தது
சையது ஹமீது கல்லூரி 24 ஆம் ஆண்டு விழா.!
ராமநாதபுரம் சையது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீழக்கரையில் 24வது கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா முகமது சதக் அறக்கட்டளை தலைவர் அல்ஹஜ் முகமது யூசுப் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் செயலர் ஹாஜியாணி சர்மிளா இயக்குனர்கள் ஜனாப் ஹாமித் இப்ராஹிம் மற்றும் ஜனாப் ஹபீப் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் அவர்கள் தலைமைய உரையாற்றி ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் எம் ராமச்சந்திரன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஆர் செந்தில்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய முனைவர் ராமச்சந்திரன் அவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயில்வது என்பது வாழ்க்கையின் முழுமையான கல்வி முறையாகும் அதாவது கலை என்பது அனுபவ அறிவை குறிக்கிறது.

அறிவியல் என்பது பரிசோதனையால் வரும் அறிவைக் குறிக்கிறது மாணவர்களுக்கு இந்த இரண்டு அறிவும் தேவை என்பதை அவருக்கே உரிய பாணியில் விளக்கினார். மொத்தத்தில் கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்வது என்பதை விட மானிட பண்புகள் மனித நேயம் ஆகியவற்றை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி