திண்டுக்கல் ஆர்.வி. நகர் பகுதியில் மதுரை வீரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் அஷ்ட திக்கு லிங்கேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. இந்நிலையில் நேற்று (பிப்., 11) தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு லிங்கேஸ்வரருக்கு 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.