அரசால் கொள்முதல் செய்யப்படும் 600 தாழ்தள மின்சார பேருந்துகளுக்கு ஓட்டுநர்களை நியமித்து அதனை பராமரிப்பு செய்திட தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கலாம் என சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இப்பேருந்துகளுக்கான நடத்துநர்கள் போக்குவரத்து கழகம் சார்பிலும், ஓட்டுநர் நியமனம் மற்றும் பேருந்து பராமரிப்பு உள்ளிட்டவை ஒப்பந்தம் எடுக்கும் தனியாரும் மேற்கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.