கேரள மாநிலம் குருவாயூர் அருகே திருவேங்கடம் என்கிற இடத்தில் வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள் பாலிக்கும் வெங்கடாஜலபதி திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதியின் அம்சமாக காட்சி தருகிறார். இந்த திருக்கோயில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கூறப்படுகிறது. மூலவர் திருப்பதி பெருமாளை நினைவூட்டும் வகையில் அதே வடிவத்தில், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அன்னை பகவதி வேங்கிடத்தம்மாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.