நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, நடத்தை விதிகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர்கள் ஷஹீன் அஃப்ரிடி, சாத் ஷகீல், கம்ரன் குலாம் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூவுடனான மோதலுக்காக அஃப்ரிடிக்கு 25 விழுக்காடு அபராதமும், பவுமாவின் விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடிய ஷகீல், குலாம் ஆகியோருக்கு தலா 10விழுக்காடு அபராதமும் ஐசிசி விதிக்கப்பட்டுள்ளது.