பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.!

79பார்த்தது
ராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கம் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


பிளாஸ்டிக் பயன்பாடு அரசால் முற்றிலும் தடை செய்யப்படும் கூட கணிசமான அளவில் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் ஆனது தற்போது வரை பயன்பாட்டிலேயே இருந்து வரும் சூழலில் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழித்து பழைய கால துணிப்பை முறை உள்ளிட்ட சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி வேலு மாணிக்கம் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியானது, அரண்மனை துவங்கி வண்டிக்கார தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று வழி விடு முருகன் பகுதியில் நிறைவடைந்தது மாணவ மாணவிகள் மஞ்சள் பையை பெற்றுக் கொண்டதோடு கையெழுத்து இயக்கம் உள்ளிட்டவையும் இடம் பெற்று இருந்த நிலையில் பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவ மாணவிகள் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி