கமுதியில் ஜூன் 11ல் ஜமாபந்தி துவக்கம்.!

71பார்த்தது
கமுதி வட்டத்தில் வரும் ஜூன் }11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஜமாபந்தி (வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கும் பணி) நடைபெற இருப்பதால், பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம் என கமுதி வட்டாட்சியர் வ. சேதுராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம் தனி துணை ஆட்சியர் தலைமையில் வருவாய் தீர்வாய கணக்கு நடைபெற உள்ளது. ஜூன் 11ல் அபிராமம் உள் வட்டம், 12ல் கமுதி கிழக்கு உள் வட்டம், 13ஆம் தேதி கமுதி மேற்கு உள் வட்டம், 14 ஆம் தேதி கோவிலாங்குளம் உள்வட்டம், 18 ஆம் தேதி பெருநாழி உள் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கு வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் குறைகளை இ சேவை மையங்கள் மூலமாகவும், நேரிலும் மனு அளித்து பயன்பெறலாம் என கமுதி வட்டாட்சியர் வ. சேதுராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி