ராமநாதபுரம் மாவட்டம் நைனார் கோவில் அருகே அயன்சித்தனேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆனது செயல்பட்டு வருகிறது. இங்கு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம் இன்று மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் உதவி ஆணையாளர் கண்ணன் தலைமையில் தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் ராணி ஆசிரியர் திருஞானம் முன்னிலையில் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முன்னதாக, தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் ராணி பெற்றோர் மற்றும் மாணவர்களை ரோஸ் கொடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்றார் பின்னர் மாணவர்கள் உற்சாக நடனம் ஆடி அனைவரையும் வரவேற்றனர் தொடர்ந்து பள்ளிக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுவர் கடிகாரம் வழங்கினர் பின்னர் சிறுவனுக்கு மிதிவண்டியும் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளி சிறுவன் ஹரிகரன் தினமும் நான் நான்கு கிலோமீட்டர் நடந்து வருவதை பார்த்த எனது ஆசிரியர் பள்ளிக்கு அழைத்து வருவதும் பள்ளி முடிந்ததும் தனது ஊரில் விட்டுச் சொல்வதுமாக இருந்து வந்தார் தற்போது நான் பள்ளிக்கு எளிமையாக வருவதற்கு மிதிவண்டி ஒன்றை தனது சொந்த செலவில் வாங்கி தனக்கு வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.