மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: ஏராளமானோர் பங்கேற்பு.!

74பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள் தங்களின் விடுமுறை காலத்தை பயனுள்ளதாகக்க வேண்டும், தமிழர்களின் பாரம்பரிய கலையை நிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தென் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட 5 வயது முதல் 19 வயது வரை உள்ள சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியை முதுகுளத்தூர் DSP சின்னகண்ணு, காவல் ஆய்வாளர் துரைப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த சிலம்ப போட்டியில் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு அவர்களின் தனித்திறமை மற்றும் குழு திறமைகளின் படி மதிப்பெண் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அனைவருக்கும் ரொக்கம் மற்றும் கேடயம் பரிசளிக்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி