அந்தோணியார் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.!

73பார்த்தது
அந்தோணியார் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.!
கமுதி மெயின் பஜாரில் புனித அந்தோணியார் சர்ச் தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்த சர்ச் 300 ஆண்டுகளுக்கு பழமையான வாய்ந்தது. இங்கு தேர் திருவிழா முன்னிட்டு நேற்று கொடியேற்றம் விழா நடந்தது. அந்தோணியார் உருவம் பொறித்தக் கொடி ஏற்றப்பட்டது.

இதில் கமுதி பாதிரியார்அமலன், திருப்பத்துார் பாதிரியார் அற்புத அரசு முன்னிலை வகித்தனர். பின்பு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஜூன் 14ல் திருப்பலி நடைபெற்று மாலை புனித அந்தோணியார், புனித ஜெபஸ்தியார், புனித சவேரியார், புனித மிக்கேல் சம்மனசு ஆண்டவர் தேர்பவனி சர்ச்சில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் உலா வந்து மீண்டும் சர்ச்சை வந்தடையும்.

ஜூன் 15ல் கிறிஸ்தவ தெருக்களில் தேர்ப்பவனி, ஜூன் 16ல் கர்த்தர் நாதர் சுவாமி அசனம் நடைபெறும். ஏற்பாடுகளை பரத உறவின் முறையார், விழாக் குழுவினர் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி