கமுதி அருகே உருவாட்டி காளியம்மன் கோவில் வருட அபிஷேக விழா
*பக்தர்கள் கொட்டும் மழையில் பக்தர்கள் மேளதாளம் இசை வாத்தியம் வான வேடிக்கையுடன் பக்திப் பரவசத்துடன் பூஜை பெட்டியுடன் 108 பால்குடம் ஊர்வலம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே
கோவிலாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உருவாட்டி காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் விநாயகர் ஆலயத்தில் இருந்து பூஜை பெட்டியுடன்108 பால் குடங்களை மேளதாளம் இசை வாத்தியங்கள் வான வேடிக்கையுடன் கோவிலாங்குளம் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக கொட்டும் மழையில் நனைந்தவாறு பக்திப் பரவசமுடன் நகர்வலமாக உருவாட்டி காளியம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், தயிர், சந்தனம், இளநீர், தயிர், கும்ப நீர் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை பூஜை , கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாதாரணை நடைபெற்றது.
இதில் கோவிலாங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.