ரஜினியால் ஆர்.எம்.வீரப்பன் பதவியை பறித்த ஜெயலலிதா

70பார்த்தது
ரஜினியால் ஆர்.எம்.வீரப்பன் பதவியை பறித்த ஜெயலலிதா
1995ம் ஆண்டு வெளிவந்த ‘பாட்ஷா’ திரைப்படத்தை ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதன் வெள்ளி விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துவிட்டது எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தயாரிப்பாளர் என்ற முறையில் இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், ரஜினிகாந்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த ஜெயலிலதா ஆர்.எம்.வீரப்பனை அமைச்சரவையில் இருந்து நீக்கியதுடன், கட்சியை விட்டே நீக்கினார்.

தொடர்புடைய செய்தி